பிறப்பு முதல் இறப்பு வரை ; தமிழர்களின் தோற்றம், வரலாறு இவை குறித்த ஆதாரத்
தகவல்களுடன், சமகாலத்திய பார்வையுடன் சோவியத் யூனியனும் வேறு இடங்களிலும்
தமிழ் ஆய்வு மேற்கொள்ளப்படுவது போல், ஓர் அறிக்கை போலல்லாது, ஒரு வினாவைப்
போல, தமிழர்களுடைய பழக்க வழக்கங்கள், மரபுகள் பாரம்பரியங்கள் குறித்து ஆசிரியர்
முழு அளவில் கவனஞ் செலுத்தியிருக்கிறார். தனது ஆய்வு வழிச் சான்றுகளோடு, தான்
இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் மேற்கொண்ட சொந்தக் களப்பணிகளினின்றும்
செய்திகளைத் திரட்டித் தந்திருக்கிறார். இதனால் தான் தமிழியலாளர்கள் இதுவரை கவனம்
செலுத்தாத சில புதிய விஷயங்களை அவரால் திறமையாகக் கையாள முடிகிறது.
எடுத்துக்காட்டாக தமிழ்ப் பெயர்கள், பேறுகாலத்தின் போதைய சடங்குகள்,நம்பிக்கைகள்,
திருமணம் பிறப்பு சோதிடம், அதிர்ஷ்ட எண்கள், இன்னும் நாட்டுப்புற நாடகம், நடனம்,
குறித்த அத்தியாயங்கள் சிறப்பாகப் பயனுள்ளவையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளன.
Be the first to rate this book.