தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது.
சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக வந்துபோகும் நிஷா மன்சூரின் கவிதைகளில் தீவிரம்,அதிதீவிரம், வெகுஜனம் என்னும் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு எல்லா வாசகனின் வாசிப்புக்காகவும் தன்னைத் தந்துகொண்டிருக்கிறது கவிதை. ஓரளவு பயிற்சியும் ஆர்வமும் கொண்ட வாசகனால் எளிதில் உள்நுழையவும் அவற்றுள் தங்கி இருக்கவும் வாய்ப்பை வழங்குகின்றது நிஷாவின் இந்தத் தொகுப்பு .
-ஹாமீம் முஸ்தஃபா
Be the first to rate this book.