‘ஜரோப்பாவை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது; அதன் பெயர் கம்யூனிஸம்’ என்று சென்ற நூற்றாண்டில் மார்க்ஸ் - எங்கல்ஸ் எழுதினார்கள். அதைப் போலவே இந்த நூற்றாண்டை ஒரு புதிய பூதம் பிடித்தாட்ட வந்திருக்கிறது. அதன் பெயர் போஸ்மாடர்னிசம்.
தமிழில் பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இதுவரை வந்திருக்கும் எல்லா
இஸங்களையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், பழைய மதிப்பீடுகளை ரத்து செய்துவிட்டு, புதிய மதிப்பீடுகளை முன்வைக்கிறது.
இத்தகைய சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடையில் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பதை சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. சிறந்த நூலுக்கான ‘ஏலாதி இலக்கிய விருது’ பெற்றிருக்கும் இந்த நூல், தமிழில் இதுபோன்ற வகைமைக்கு முதல் முயற்சி எனலாம்.
5 Tamil
Good
K.pratherpan 14-02-2020 02:11 pm
5
Maitheen abdulkather 07-04-2019 01:22 am