கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்களுக்குள்ள உறவையும் கேள்விக்குள்ளாக்குவதுடன் ஊடுருவி ஆய்கிறார் கிறிஸ்தோஃபர் பட்லர். சிண்டி ஷெர்மன், சல்மான் ருஷ்டி, ழாக் தெரிதா, வால்டர் அபிஷ், ரிச்சர்ட் ரோர்ட்டி போன்ற கலைஞர்கள், அறிவுஜீவிகள், விமர்சகர்கள், சமூக விஞ்ஞானிகளை நெகிழ்வாக அமைக்கப்பட்ட பிணக்குகள் நிறைந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களைப் போல் இவர் அணுகுகிறார். அருங்காட்சியகக் கலாச்சாரத்தின் அரசியல் நோக்கம் முதல் நேர்மையான அரசியல் குழுக்கள் வரையிலான பலவற்றைக் கொண்ட ‘பின்நவீன நிலைமை’ என்பதன் மர்மங்களை விளக்கக்கூடிய ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விரிவான அணுகுமுறையை இதில் உருவாக்கியுள்ளார்.
Be the first to rate this book.