தமிழினத்தின் இருத்தலுக்கான பிடிமானங்களைப் பற்றியதான கருத்துக்களை விரிவாக ஆய்ந்தறிந்து எழில் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ்த்தேசியம் நாளாந்த தேசியமாக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நிற்கின்றது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாத அரசியல் தலைமைகள் குறித்தும் சிவில் அமைப்புகளும் சமூக இயக்கங்களும் மாற்று பிரதிநிதித்துவமாக ஆகவேண்டியதன் அவசியத்தையும், நல்லிணக்க அரசியல், பொதுவெளிகளை மக்கள் குரலாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் தெரு ஓவியர்களின் பங்கு, பண்பாட்டு எழுச்சியின் அவசியம் என்று தமிழ்த்தேசியத்தின்பால் உறுதியான பற்றுதலோடு எழுதப்பட்ட கட்டுரைகளைக்கொண்ட இந்நூல் சமகாலத்தை காத்திரமாகப் பதிவுசெய்கிறது.
– வெற்றிச்செல்வி, எழுத்தாளர்.
Be the first to rate this book.