பின்கதைச் சுருக்கம்' என்கிற பொதுவான தலைப்பில் வாரம் ஒரு நாவல், அதன்மூலம் நாவலாசிரியர் குறித்த அறிமுகம் என்கிற அமைப்பில் கல்கியில் இக்கட்டுரைகளை எழுதினேன்.
தமிழ் நாவல், அயல்மொழி நாவல், தற்கால எழுத்தாளர், அந்தக்கால எழுத்தாளர் என்கிற பேதங்கள் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையில் படைப்புகளைத் தேர்வு செய்து எழுதினேன்.
எனக்கு வந்த சில கடிதங்களில், இன்றைக்கு ஏன் இத்தகைய 'க்ளாசிக்ஸ்' எழுதப்படுவதில்லை என்று சிலர் ஆதங்கத்துடன் கேள்வி கேட்டிருந்தனர். நவீன, பின்நவீன, மையம் குலைத்த நாவல்கள் அவற்றின் உத்தி சார்ந்து சில சலனங்களை எழுப்பினாலும், அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தத் தவறுவது ஏன் என்று வேறு சிலர் கேட்டிருந்தார்கள்.
இந்தக் கட்டுரைகளின்மூலம் சில நல்ல நாவல்கள், சில முக்கியமான நாவல்கள் குறித்த மிக எளிய அறிமுகங்களைத் தமிழ் வாசகர்கள் முன்பு வைக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
-ராகவன்
Be the first to rate this book.