புதுமையும் உயிரோட்டமும் கூடிய இந்தப் புத்தகம், பின்காலனியம் பற்றிய வேறு எந்தவொரு அறிமுகத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்டது. அரூபமான கோட்பாடுகளைப் பரிசோதிப்பதை விடவும் சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் சான்றுகளை முன்வைத்துக் காலனிய வீழ்ச்சியின் அரசியல், சமூக, கலாசாரப் பின்விளைவுகளைப் பரிசீலிக்கிறார் ராபர்ட் யூங். தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிரித்தெறியப்பட்ட தொல்குடிகளின் நிலைமை, அல்ஜீரியன் ராய் இசை, பின்காலனியப் பெண்கள் மற்றும் உலகளாவிய சமூக, சுற்றுச்சூழல் இயக்கங்கள் போன்ற எடுத்துக் காட்டுகளைப் பயன்படுத்தி, வரலாற்று நிலைமை என்கிற அதன் முக்கியத்துவத்தை விவாதிப்பதன் மூலம், பரந்துபட்ட கலாசாரப் பின்புலத்தில் அவர் விவாதங்களை அமைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த கால காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள், இன்று நிலவுகிற உலகளாவிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக ஒரு புதிய பாதையில் தொடர்வதையும், அதற்கான செயல் இயக்கம் குறித்த ஒரு அரசியல் தத்துவத்தைப் பின்காலனியம் அளிப்பதையும் யூங் விவாதிக்கிறார்.
Be the first to rate this book.