நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் ஆகாயத்தில் நடந்துகொண்டிருந்த பண்பாட்டு வாள்சுழற்றல்களைப் புறந்தள்ளிவிட்டு, முதலில் அரசியல் நவீனத்தைப் புரிந்துகொள்வோம் என்று இப்புத்தகம் அழைக்கிறது... மம்தானி உள்ளிட்ட வெளிப்புலத்துச் சிந்தனையாளர்கள் தாண்டி தமிழ் அறிவுஜீவி மரபில் தேசியம் குறித்த விவகாரத்தில் தமிழில் முதன்மையாகப் பங்களிப்பு செய்த மார்க்சிய, பெரியாரிய, பெண்ணியச் சிந்தனையாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் உரையாடுகிறது. அந்த வகையில் இது சமகால மேற்கத்தியக் கல்விப்புலச் சூழலில் நிலவிக்கொண்டிருக்கும் விமர்சனப் போக்குகளை தமிழ்ப்புலத்தில் உருவான விவாதங்களோடு இணைத்து, இரண்டையுமே அடுத்த நிலையிலான விவாதங்களுக்கு வளர்த்தெடுக்க முயல்கிறது. இது உண்மையிலேயே தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான சிந்தனை நிகழ்வாகும். இவ்வாறான முயற்சிகளே கோட்பாட்டை நாம் காலூன்றியுள்ள பூமியில் உலவ விடும். அவ்வகையில், இப்புத்தகம் குறிப்பாக விமர்சன முஸ்லிம் சிந்தனையையும் காலனிய நீக்கச் சிந்தனையையும் கோட்பாட்டு ஆழத்தோடு அறிமுகப்படுத்தியிருப்பதிலும், பொதுவாக சமகால அரசியல், மானுடவியல், சமூகக் கோட்பாடுகளை எளிமைப்படுத்தல் இல்லாது, ஆனால் எளிதில் புரிபடும் வகையிலான தெளிவோடு அறிமுகப்படுத்தியிருப்பதிலும் பெரிய முன்னுதாரணங்களற்ற தமிழ்ச்சூழலில் அசலான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றிக் கூற முடியும்.
— அணிந்துரையிலிருந்து…
Be the first to rate this book.