லூயி கரோலின் ஆலிஸ் மற்றும் ஹம்ப்டி டம்ப்டி ஆகியவற்றின் அர்த்தம் குறித்த கேள்விக்கான மறுப்போடு இந்தச் சுருக்கமான அறிமுகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து, மொழி மற்றும் கலாசாரம் பற்றிய மரபான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பின்அமைப்பியல்வாதிகள் மேற்கொண்ட முக்கியமான விவாதங்களை இந்நூல் இனம் காண்கிறது.
நன்கு அறியப்பட்ட ஆளுமையாளர்களான பார்த், ஃபூக்கோ மற்றும் லக்கான், அதேபோன்று கிறிஸ்தெவா, லியோடார்த் மற்றும் சிசெக் ஆகியோர் பற்றி விவாதிக்கிறார் காதெரின் பெல்சி. அதேசமயம், இலக்கியம், கலை, சினிமா மற்றும் வெகுமக்கள் கலாசாரம் ஆகியவற்றிலிருந்தும் முக்கியமான எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார். ஷேக்ஸ்பியரின் இசைப் பாடல்கள் மற்றும் டோனி மாரிசனின் ‘நேசிக்கப்பட்டவர் (Beloved)’ ஆகியவற்றிலிருந்தும், டிட்டியன் மற்றும் பாஸ் லுஹர்மன் போன்றோரிடமிருந்தும் இவர் முன்வைக்கும் எடுத்துக்காட்டுகள், மனிதப் பிறவியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த பின்அமைப்பியவாதிகளின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன.
Be the first to rate this book.