ஒருவன் – ஒருத்தி அறத்தோடு இருக்கவேண்டும் எனில் அவனது – அவளது பெற்றோர் அறவான்களாக வாழ்ந்தாகவேண்டும். ஆகவேதான் தேசத்தந்தை மகாத்மா நம்மிடம் ‘எனது வாழ்வே எனது செய்தி’ என்றார். இந்த நூலும் அதையேதான் வலியுறுத்துகிறது. தீர்வுகளற்ற சவால் என்ற ஒன்று இந்த உலகில் இருக்கவே முடியாது. எந்தவொரு பிரச்சினையையும் திறந்த மனதுடன் அணுகினால் தீர்வுகள் பிறக்கும் என்றெல்லாம் நாம் அறிவோம். குழந்தை வளர்ப்பிலும் இந்த அணுகுமுறையே சரியாக இருக்கும் என்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கியுள்ளார் யெஸ். பாலபாரதி.
– இராம. கௌரி, ஓய்வு- ஆசிரியர்
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.