‘காலச்சுவடு’ பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசியல் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளும் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்வைக்கும் அம்பை, சுகுமாரன், பி.ஏ. கிருஷ்ணன், நாஞ்சில் நாடன் உள்பட பதினாறு படைப்பாளிகள் விமர்சகர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வாசகர்களின் ஒப்பீட்டுக்காகப் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.