சுஜாதாவும் கலாமும் இணைந்து எழுத விரும்பிய நூல் இது! இந்திய ராக்கெட் இயலின் வரலாறும் விஞ்ஞானமும். நாம் தேசப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளையும் (Missile), விண்வெளி ஆய்வுக்காக ஏவு வாகனங்களையும் (Launch Vehicle) எப்படி மெல்ல மெல்ல உருவாக்கினோம் என்ற சரித்திரத்தை வெப்சீரிஸின் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. பூஜ்யத்திலிருந்து தொடங்கி, தொடர் தோல்விகளில் தளராமல், அக்னியில் எரிந்தடங்கிய சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல் இந்திய ராக்கெட்கள் புவியீர்ப்பு உதறி விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்த கதை இது! 2015 - 2016ல் 'குங்குமம்' இதழில் தொடராக வெளியாகி இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டுக்களைப் பெற்றது.
Be the first to rate this book.