இந்நூல் சினிமா ஊடகத்தின் பிரிவுகளான மாற்றுப் படங்கள், வெகுஜனப் படங்கள், குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள், விளம்பரப் படங்கள் ஆகியவற்றை அழகியல் பார்வையுடன் ஆய்வுக்குட்படுத்துகிறது.
சத்யஜித் ராய், இங்மர் பெர்க்மன், அகிரா குரோசாவா, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சிவாஜி கணேசன், நிமாய் கோஷ், எம்.பி. சீனிவாசன் போன்ற பல கலைஞர்கள் பற்றிய நுணுக்கமான அணுகல்கள் இவற்றில் வெளிப்படுகின்றன. கலைப்படம், வணிகப் படம் ஆகிய சொல்லாடல்கள் வாயிலாகப் பலகாலமாக நீடித்துவரும் போக்குகளை ஆரோக்கியமாக எதிர்கொள்ளும் விவாதங்களும் சினிமாவை ஒரு தொழிலாகப் பார்க்க வேண்டிய கண்ணோட்டத்தின் அவசியமும் நூல் முழுவதும் விரவிக்கிடக்கும் அம்சங்களாகும்.
பரந்த இந்தியசர்வதேசத் திரைப்படப் பின்னணியில் தமிழ்ப்பட விமர்சனம், சரித்திரம், அவை முன்வைக்கும் கலாச்சாரம் பண்பாடு குறித்த கேள்விகள் ஆகியவற்றை ரசனை அடிப்படையில் அணுகும் இந்நூல் தமிழில் சினிமா பற்றி வெளிவந்துள்ள முன்னணியான படைப்புகள் மத்தியில் தனியிடம் வகிக்கிறது.
Be the first to rate this book.