கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார அதிர்ச்சியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நெருக்கடியான சூழலில், கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையிலான உடனடி கொள்கைவகுப்பும் செயல்திட்டமும் அவசியமாகும். நிறுவனத்தின் பேராசிரியர்களும் அவர்களுடன் பணியாற்றும் ஆய்வாளர்களும் இந்த நெருக்கடியைக் குறித்துச் சிந்தித்தும், அது விடுக்கும் அறைகூவல்களை எதிர்கொண்டும், ஒன்றோடொன்று தொடர்புடைய பற்பல துறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை ஆராய்ந்தும், அரசின் கொள்கை முடிவுகளுக்குக் குறுகியகால மற்றும் நீண்டகாலக் கொள்கை நடவடிக்கைகளைப் இந்த நூலில் பரிந்துரைக்கின்றனர்.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழகப் பொருளாதாரத்தின் மீதான கோவிட்-19 பெருந்தொற்றின் உடனடித் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. காலம் கருதி வெளிவரும் இந்நூல் கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் தற்போதைய சமூகப் பொருளாதாரச் சூழலைப் புரிந்துகொள்ள உதவும்.
Be the first to rate this book.