உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் அம்மக்களோடு மக்களாக கலந்து,நமது சிறுபிராய நினைவுகளில் சித்திரம்போல் தங்கிவிட்ட எளிய மற்றும் பல்வேறு வகைப்பட்ட தொழில்சார்ந்த மனிதர்களை இக்கவிதைகள் உயிர்ப்பிக்கின்றன.பொருள்சார்ந்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் இக்கலத்தில் நாம் சவ்வுபோல அதற்கு நெகிழ்ந்துக்கொடுத்து நீள்கிறோம்.போதும்,இனி வேண்டாம் என்று அவ்வாழ்வு வெளியேற்றும்போது நாம்,நமது வேர்களில்தான் வந்து விழுந்தாக வேண்டும்.அப்படி விழும்போது மீண்டும் துளிவிடுவதற்கான பச்சையத்தை கொஞ்சமேனும் தேக்கிவைத்துள்ளோமா?இவற்றை பிரதிபலிப்பவையே நாகாவின் கவிதைகள்.
- மு.வேடியப்பன் (பதிப்பாளர்)
Be the first to rate this book.