ஹைகூக் கவிதைகள், காதல் கவிதைகள், மணல் துகள் உறுத்தும் வாழ்வியல் கவிதைகள், குழந்தைகள் தவழும் குதூகலக் கவிதைகள் எனப் பரிசோதனை செய்து பார்த்த களங்களும் பல. ஒவ்வொன்றிலும் வெட்டியெடுத்த தங்கக் கட்டிகளுக்குக் கணக்கே இல்லை.
இது இசாக்கின் எழுத்து வனப்பு.
இப்போது புதிதாக வலம் வருகிறார் ‘பெருநகரத்துச் சிறுவர்களு’டன். இசாக்கின் கவிதைத் தெறிப்புகள் ஈரமின்னல்களாய் ஊர்வலம் வரும் தொகுதி ‘பெருநகரத்துச் சிறுவர்கள்’.
- கவிஞர் சிற்பி
வெளிச்சமென்ன என்பதை உணருங்கள் நிச்சயம் உங்கள் விரல்களில் சுடர் எரியும் உயர்த்திப் பிடித்திருக்கும் கவிஞரின் விளக்கு, ஒளிபற்றிய உயர்வுமிக்க அடையாளம். அது தரும் தெளிவான நம்பிக்கை நம்மை மிகவும் ஈர்க்கிறது. இசாக் கூர்மையாகப் பார்த்து முன்னர் படித்திருந்ததையெல்லாம் உள்வாங்கித் தன்னுடைய சுய நிர்ணயத்தில் சொற்களைக் கட்டமைத்திருப்பது பல இடங்களில் ‘ஆஹா’ என்று பாராட்டச் சொல்கிறது.
-கவிஞர் இரா.மீனாட்சி
தான் கால்பதிக்கும் இடங்களிலெல்லாம் தனித்தன்மையோடு தடம் பதிக்க மறக்காதவர் தம்பி இசாக். பாலை வனத்திலும் இலக்கியச்சோலை வளர்த்து வெற்றிக்கண்டவர்.
-கவிக்கோ
தோழர் இசாக், எளிய உழைக்கும் மக்களின் பக்கம் நின்று அவர்களின் வலிகளைக் கவிதைகளாக எழுதுகிறவர், அதனாலேயே எனக்கு நெருக்கமான விருப்பமானத் தோழராகவும் இருக்கிறார்.
-இன்குலாப்
Be the first to rate this book.