ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் 51 பாகங்களாக விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தேவி பாகவதம் என்ற நூல், சக்திக்கு 108 பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்றும் கூறுகிறது. தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் பிரதானமானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியாரின் ‘அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம்’ 18 மகா சக்தி பீடங்கள் பற்றியும், காளிகா புராணம் 4 ஆதி சக்தி பீடங்கள் பற்றியும், மார்க்கண்டேய மற்றும் திருவிளையாடற் புராணங்கள் 64சக்தி பீடங்கள் குறித்தும்,ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராணங்கள், சக்தி தேவிக்கு 70 முதல் 108 பீடங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன. எவ்வகையிலும் சாராத உப பீடங்கள் 55 உள்ளதாகவும் அறியப்படுகிறது.
அநீதியை அழிக்கும் பூமியாகவும், அன்பைப் பொழியும் இடமாகவும் சக்தி தலங்கள் விளங்கி வருகின்றன. தேவியானவள் அனைத்து அரக்கர்களையும் அழித்து பக்தர்களை காப்பதாக அறியப்படுகிறது. அரக்கன் என்பவன் அகம், புறம் ஆகிய இரு இடங்களிலும் அழிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறான். கண்களுக்கு நேரே இருக்கும் அரக்கனை அழிப்பது நடக்கக் கூடியதே. ஆனால் நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் துர்குணங்களாகிய அசுரர்களை அழிப்பதே நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டக் கூடியதாக அமையும்.
Be the first to rate this book.