பெரியசாமித் தூரன் (1908-1987) துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை பாரதி தமிழ் என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம் இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரிய பங்களிப்புச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய் அவர்தம் கலைக் களஞ்சியப் பெருந்தொகுப்புப் பணி சிறந்து விளங்குகின்றது.
அவர்தம் இலக்கிய பங்களிப்பையும் அவர் ஆழ்ந்து கவனம் செலுத்தியப் பாரதியியல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளையும் விளக்கும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது இந்நூல்.
Be the first to rate this book.