1990களில் இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்காகத் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் பற்றி உற்சாகத்துடன் மீள் விசாரணை உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்ற உரையாடல்கள் இந்துத்துவம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் இன்றைக்கு மென்மேலும் அவசியம் எனக் கூறத் தேவையில்லை. இவ்வேளையில் மார்க்சியர்கள் வெறுமனே பெரியாரை ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறுவதால் ஒரு பயனும் இல்லை. பெரியாரையும் அம்பேத்கரையும் ஆழமாகப் பயில்வதன் மூலம் மட்டுமே, அவர்களது நீரோட்டத்தில் முங்கி எழுவதன் மூலம் மட்டுமே மார்க்சிய வட்டாரமும் நாடும் நாட்டு மக்களும் பயனுற முடியும். இந்த நோக்கில் எழுதிய குறிப்புகளே இந்நூல்.
தமிழ் ஆராய்ச்சி மாணவர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் சமய உருவாக்கம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழ்ச் சமூகத்தில் சமய வரலாற்றில் மட்டுமில்லாமல், தத்துவச் சிந்தனை வரலாற்றிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றவர்.
முன்னுரை
1. பொருள்முதல்வாதம் – ஒரு தத்துவ விசாரணை
2. நவீன தமிழ்ச் சிந்தனையில் தத்துவம் பற்றிய கருத்தாக்கங்கள் : சிங்காரவேலரும் பெரியாரும்
3. மதமும் கடவுளும் : ஆபாசம் – புரட்டு – ஏமாற்று
4. தமிழும் பெரியாரும்
5. உவேசாவும் பெரியாரும் : இலக்கியப் பாட ஆய்வு வரலாற்றில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பற்றிய சில குறிப்புகள்
6. பெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்
7. வகுப்புகள் X வர்க்கங்கள் : அம்பேத்கர் – பெரியார் – கம்யூனிஸ்ட்கள்
ஆய்வு துணைநூல் பட்டியல்
Be the first to rate this book.