சென்னையில் ஆதிதிராவிடர்கள் நடத்திய இரட்டை வாக்குரிமை ஆதரவுக் கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தோழர் பொன்னம்பலம் உரையாற்றிய போது, சில பார்ப்பன மாணவர்கள், “காந்திக்கு ஜே!, அம்பேத்கருக்கு ஷேம்!” என்று கூச்சல் எழுப்பிக் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்திய நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் அம்பேத்கரின் கோரிக்கை மிகப்பெரும் தவறு என கட்டுரைகளையும், தலையங் கங்களையும் வெளியிட்டன. அம்பேத்கரை “வகுப்புவாதி” என்றும், “தேசத்துரோகி” என்றும் எழுதின.
வட்டமேஜை மாநாடு முடிந்து பம்பாய் திரும்பும் போது அம்பேத்கரைக் கைது செய்வதற்காக, ஒரு அடி தடி வழக்குப் பதியப்பட்டு, அம்பேத்கருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காங்கிரசும், இந்து மகாசபையும், எடுத்த - மேலே குறிப்பிட்டது போன்ற ஒவ்வொரு துரோகச் செயல்களுக்கும் பெரியார் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றியுள்ளார். இரட்டைவாக்குரிமைக்கு எதிர்நிலை எடுத்த எம்.சி. இராஜா, சகஜாநந்தம் போன்ற தலைவர்களின் கருத்துக் களுக்கும் எதிர்வினையாற்றியுள்ளார்.
நாங்கள் அறிந்தவரை, இரட்டைவாக்குரிமைக்காகவும், அந்தப் போராட்ட நாயகர் அம்பேத்கருக்காகவும் அந்தக் கால கட்டத்தில், இந்திய அளவில் வேறு எந்தத் தலைவரும், வேறு எந்த இயக்கமும் இவ்வளவு தீவிரமான, தொடர்ச்சியான ஆதரவை வழங்கவில்லை.
“உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதா யிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர் களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்று தான் உறுதி யாக நாம் கூறுவோம்.” - (குடிஅரசு - 18.09.1932)
Be the first to rate this book.