கோயிலில் சாமி இருக்கிற கர்ப்பக்கிரகம் - மூலஸ்தானம் என்கின்ற, இடத்திற்கு நாம் போகக்கூடாது என்று தடை செய்வது நம் இழிவை நிலைநிறுத்துவதாக இருப்பதால், அத்தடையை மீறி நாம் உட்சென்று நம் இழிவைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகக் ‘கர்ப்பக்கிருஹத்தி’ற்குள் செல்வது என்கின்ற கிளர்ச்சியினைத் துவக்க இருக்கின்றோம், கர்ப்பக்கிருகத்திற்குள் போவது நாம் சாமியைக் கும்பிடுவதற்காக அல்ல. நம் இழிவைப் போக்கிக்கொள்வதற்காகவே ஆகும். நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போவதால் சாமி தீட்டாவதாக இருந்தால் - வெளியே இருக்கிற சாமிகளை எல்லோரும் தொட்டு வணங்குகிறார்கள். அதற்கு மட்டும் தீட்டு இல்லாமல் போனது எப்படி? எனவே, நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது நம்மை ஏமாற்றி நம் இழிவைப் பாதுகாக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ஆகும்.
Be the first to rate this book.