குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை - ஆகிய இதழ்களின் தொகுப்பை ஆழ்ந்து படிப்பதை நீண்டகால பழக்கமாக நான் கொண்டிருந்தேன்..
தந்தை பெரியார் தனது எழுத்து, பேச்சுகளுக்கு இடையே குறிப்பிட்டிருந்த பழமொழிகளைத் தொகுத்துவந்தேன். அவற்றை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகைக்குச் சென்று அய்யா பெரியாரிடம் படித்துக்காட்டினேன்; மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..
பழமையைப் புரட்டிப்போடும் மூடநம்பிக்கைகளை முறித்துப்போடும் புரட்சிப் பகுத்தறிவுக் கருத்துகளை, பொருத்தமான பழமொழிகளை அவரது பேச்சு எழுத்துக்களிடையே காணலாம். அவை படிப்பவரை சிந்திக்கத் தூண்டும்..
அதுபோலவே பெரியார் பேச்சிலும் எழுத்திலும் பயன்மொழிகள், கட்டுக்கோப்பாக அப்படியே பழமொழிகளை ஒத்திருக்கும். அவையும் இங்கு ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன..
- சு.ஒளிச்செங்கோ
Be the first to rate this book.