இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்டராகப் பரிணாமம் கொண்டுள்ளது. இதன் உன்னதத்தை, அரங்கக் கலையின் முழுமையை, எந்தவிதமான சமரசமின்றி, அகிலவுலக நாடக விழாக்களிலும், இந்தியத் தேசிய, மாநில நாடக விழாக்களிலும் தெருக்கூத்தினை நிகழ்த்திக் காட்டித் தமிழனின் மரபுக் கலையரங்கின் வெளிப்பாட்டுக் கலைவடிவின் அழகியலை அரங்கச் செயற்பாட்டாளர்கள், நவீன நாடக ஆர்வலர்கள், எல்லாவற்றுக்கும் மேலாகப் பார்வையாளர்கள் உணரச் செய்த பெருமை புரிசை கண்ணப்பத் தம்பிரானுக்கு என்றும் உண்டு.
Be the first to rate this book.