கலாப்ரியா நம் காலத்து முதல்வரிசைக் கவிஞர்களில் ஒருவர். கவிதை ஊடகத்திலிருந்து உரைநடை ஊடகத்துக்கு இடம் பெயர்ந்த கலாப்ரியா அதுவரை எழுதாத எண்ணற்ற நினைவுச்சித்திரங்களைத் தீட்டத் தொடங்கினார். நினைவின் தாழ்வாரங்கள், உருள்பெருந்தேர் என தொகைநூல்களாக அவை வெளிவந்தன. வானில் விழுந்த கோடுகள் என சிறுகதைத்தொகுதியாக வெளிவந்தது. வேனல் என நாவலாகவும் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாக பேரருவி என்னும் இந்த நாவலை எழுதியிருக்கிறார் கலாப்ரியா. விறுவிறுப்பான நடையில் ஆர்வமூட்டும் வாசிப்புத் தன்மையுடன் வாழ்க்கையை மதிப்பிடும் கோணத்தில் அமைந்திருக்கும் இந்த நாவலை நான் பெரிதும் விரும்பி வாசித்தேன்.
குற்றால அருவியில் தொடங்கி பாணதீர்த்த அருவியில் முடிகிறது இந்த நாவல். பொங்கி வழியும் அருவியை கண்ணாரப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது பேரனுபவம். அந்த மாபெரும் தரிசனத்தை தன் நாவலில் காமமென்னும் படிமமாக மாற்ற முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார் கலாப்ரியா.
-பாவண்ணன்
5 Peraruvi
Jayavalli 06-05-2021 12:08 pm