வரலாறு நெடுகிலும் பெண் போராடிக் கொண்டுதான் இருக்கிறாள். தனக்கான சமூக விடுதலையை அடைய, தற்போதைய காலத்தில் சின்ன சின்னதாகப் பெண்கள் அடைந்திருக்கும் இடத்திற்குப் பின்னால் கூட, மிகப்பெரிய போராட்டமிருக்கிறது. புழுதி இதழின் ‘பெண்ணதிகாரம்’ என்ற தலைப்பே வசீகரிக்கிறது. ஏற்கனவே புழுதியின் மாதவிடாய் சிறப்பிதழினை இணையத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கிறேன் என்பதை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்.
தொடர்ந்து பல இளம் படைப்பாளர்களையும் அதிலும் பெருவாரியாகப் பெண் படைப்பாளர்களை எழுத வைக்கும் பாங்குக்கு வாழ்த்துக்கள்.
தற்போது பெண்ணதிகாரம் என்ற தலைப்பின் கீழ், பல துறை சார்ந்த பெண் ஆளுமைகளைச் சந்தித்து, அவர்களை நேர்காணல் கண்டு, தொகுத்திருக்கின்றனர். உண்மையில் இவ்விதழின் சிறப்பாசிரியர் தோழி பத்மா அமர்நாத் அவர்களின் பணி மகத்தானது.
வெற்றியை நோக்கி நடைபோடக் காத்திருக்கும் எல்லா பெண்களுக்கும் இத்தொகுப்பு மிகுந்த ஊக்கத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதேபோல் தொடர்ந்து புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை எடுக்கும் ‘புழுதி’ இதழின் நிர்வாக ஆசிரியர்களுக்கும் அக்குழுவிற்கும் எனது வாழ்த்தும் பாராட்டும்.!
- தமிழச்சி தங்கபாண்டியன்
Be the first to rate this book.