ஒரு பெண் எழுத்தாளரை கதை நாயகியாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துக்களின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்கு புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை விட ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான முரண்பாடுகளைக் கடந்து செல்ல இயலாதது அந்தப் பெண் எழுத்தாளரின் தோல்வியைத்தான் காட்டுகிறது.
Be the first to rate this book.