இஸ்லாமிய வரலாற்றைப் படைத்ததில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் பங்கேற்பும் இருந்தன என்பதற்கான அழகிய சான்றுகளாக இன்று உலகெங்கும் பள்ளிவாசல்களில் இருக்கின்ற மிம்பர்கள் ஜொலிக்கின்றன.
இவற்றைப் போன்ற ஏராளமான சான்றுகளையும், இறைவணக்கம், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம் என வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி முஸ்லிம் பெண்கள் விட்டுச் சென்ற அழியாத சுவடுகளையும் படம் பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் இந்நூல்! இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விரிவாக விவரிக்கின்ற நூல் இந்நூல்!
நாட்டின் பல்வேறு பெண்கள் மதரஸாக்களில் பாடத்திட்டத்தில் இந்நூல் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது! குடும்பத்தலைவிகள் அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது! எல்லாத் தரப்பினரும் படித்துணர வேண்டிய நூல் இது.
Be the first to rate this book.