பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்கு நேரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. பெண்களின் நலன்களைக் காப்பதற்காகவே பல சட்டப் பிரிவுகள் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்தும், நம்மில் பலருக்கு இன்னமும் சட்டம் ஓர் இருட்டறையாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் நாம்தான்.
இதன் பொருள் அச்சிடப்பட்ட சட்டப் புத்தகங்கள் அனைத்தையும் நீங்கள் கரைத்துக் குடித்தாகவேண்டும் என்பதல்ல. அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைகள் என்னென்ன, அவற்றை எப்படிச் சட்டப்படி அணுகவேண்டும் என்பதைப் பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதலாவது நம் அனைவருக்கும் இருக்கவேண்டியது அவசியம். அதற்கு வழக்கறிஞர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.
Be the first to rate this book.