5000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்த யோகாக்கலை உடலையும் உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. மனித நேயம் வாழ்வின் முறையை இதிலிருந்து உணர முடியும். ஒரு குடும்பம் மேல்நோக்கி உயர அந்த இல்லத்தரசிக்குள்ள முழுப் பொறுப்பையும் பற்றிக் குறிப்பிட்டு அதை வலியுறுத்த இந்த நூல் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
குடும்பம் சுற்றும் , உறவினர், நண்பர்கள், அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெண்கள் தங்கள் உடலையும் மனதையும் பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலையை உணர்விக்கிறது இந்த நூல்.
குருகுலத்தில் ஆண்களுக்கு மட்டும் போதிக்கப்பட்ட யோகாசனம் இன்று பெண்களுக்கும் போதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .வரவேற்கத்தக்கது. இந்த நூல் ஆசிரியர் 34 ஆசனங்கள் பற்றி கூறியிருந்தாலும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய பின்கண்ட 12 ஆசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் அவை ஒவ்வொன்றும் உடலின் எந்தப் பாகத்திற்கு பலன் அளிக்கிறது என்பதையும் செய்ய வேண்டிய முறை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
Be the first to rate this book.