பெண்களும் மானுடப் பிறவிதான் அவர்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கிலும் எழுந்தது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், சட்டத்தில் பெண்களின் உரிமைகளைக் காக்கும்வண்ணம் சில சட்டங்களை இயற்றினர். ஆனால், சட்டம் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகள் கடந்தும் நிலைமை மாறிவிடவில்லை. ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் முழுவதும் நீங்கியபாடில்லை. இதற்குக் காரணம் சட்டத்தைத் தெரிந்துகொண்டு அதன்படி நியாயம் கேட்கும் வழிமுறை யாருக்கும் தெரியவில்லை என்பதுதான். தமிழில் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பெரும்பான்மையாக சட்டப் புத்தகங்கள் இல்லை. பெண்ணை இந்தச் சமூகம் எவ்வாறு இழிவுபடுத்துகிறது, அதனைப் போக்க என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன, பெண்ணுக்குத் துன்பம் இழைப்பவர்களுக்கு என்ன தண்டனை இருக்கிறது, புகார் யாரிடம் தர வேண்டும் போன்ற சட்ட நுணுக்கங்களை தெளிவான நடையில் தந்திருக்கிறார் வழக்கறிஞர் த.இராமலிங்கம். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றி இந்நூல் முழுவதுமாகச் சொல்கிறது.
Be the first to rate this book.