பெண்கள் சமூகத்தின் சரிபாதியினர். அவர்களது பங்களிப்பு சமூக வாழ்வின் சீரான இயக்கத்திற்கு மிக அவசியமானது. நிகழ்காலப் பரம்பரையை அவர்கள் வளர்க்கிறார்கள். எதிர்காலப் பரம்பரையை வயிற்றிலும் மடியிலும் அவர்கள் சுமக்கிறார்கள், உருவாக்குகிறார்கள். பாலர் முன்பாடசாலை, அல்குர்ஆன் மதரஸாக்கள், அஹதிய்யா என்ற நிறுவனங்களில் தொடங்கிய அவர்களது பங்களிப்பு பாடசாலைகளிலும் இடத்தைப் பெற்றுவருகின்றது. அத்தோடு மருத்துவம் போன்ற இன்னும் பல துறைகளிலும் பகுதியிலும் அவர்கள் படிப்படியாக இடம் பிடித்து வருகிறார்கள்.
சமூகத்தின் தவிர்க்க முடியாத இந்த ஓட்டத்தைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்கான வழிகாட்டலை நோக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இடைக்காலப் பிரிவிலும் வீழ்ச்சிக் காலப்பிரிவிலும் பெண்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகள், சிந்தனைகள், சட்டங்களை விட்டு நாம் விடுதலை பெறவேண்டும். அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் ஒளியில், இறை தூதர் (ஸல்) காலப் பெண்களின், அதாவது ஸஹாபாப் பெண்களின் செயற்பாடுகளை நாம் நேரடியாக நோக்க வேண்டும். வரலாற்று ஓட்டத்தை நாம் பின்னோக்கி இழுக்க முடியாது. உணமையான அல்குர்ஆன், ஸுன்னாவின் வழிகாட்டல்களுக்கேற்ப அதனை நேரிப்படுத்துதலே எமது பணியாகும்.
இந்தப் பின்னணியில் நின்று அவதானிக்கும் போது பெண்கள் பகுதி பல சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்றது என்பது தெளிவு.
- எம். ஏ. எம். மன்ஸூர் நளீமி
Be the first to rate this book.