நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் - இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் குற்ற நிழல்களையும் அவர் மிகுந்த பரிவுடனும் மிகையின்றியும் சித்தரிப்பதற்கு மற்றொரு உதாரணம் பெண் இயந்திரம். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு புதிய பதிப்பாக இந்த நாவல் வெளிவரும் சந்தர்ப்பத்தில் நம் காலத்தின் மகத்தான கலைஞனின் வெற்றிடம் நம்மை அழுத்துகிறது.
Be the first to rate this book.