ஒவ்வொரு நாளும் நமது தனிப்பட்ட தேவைக்காகவும் தொழில்ரீதியாகவும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் கலையை ஆர்வமுள்ள எவரும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயரமுடியும். நெகோஷியேஷன் செய்வதன் நுணுக்கங்களையும் சூத்திரங்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் உச்சத்தை அடைவதை யாராலும் தடுத்துவிட முடியாது.
· பேச்சுவார்த்தையின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?
· ஒரு மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு தயாராவது எப்படி?
· வியாபார ஒப்பந்தங்களையும் பேரங்களையும் பேசி முடிப்பது எப்படி?
· தொழில்முறை பேச்சுவார்த்தையில் நிபுணராவது எப்படி?
· நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர் அனைவருடனும் இணக்கமான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது எப்படி?
லாபகரமான பேரங்களைப் பேசி முடிப்பதற்குத் தேவையான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 53 வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்டில் பிரபலமான பேராசிரியராகவும்,The Mind and Heart of the Negotiator என்னும் வெற்றி நூலின் ஆசிரியராகவும், ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களின் ஆலோசகராகவும் விளங்கும் லே தாம்ஸனால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Be the first to rate this book.