பேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் (1949) முதுகலைத் தமிழ், மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர்ட் பட்டங்களைப் பெற்றவர், திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர் (1985-2008). சுவடிப்பதிப்பு, வரலாறு, நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், இலக்கண - இலக்கிய உரைகள், இலக்கண - மொழியியல் ஆய்வு எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருபவர். நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருடைய வழிகாட்டுதலில் பதினேழு ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழக அரசால் தமிழறிஞர் எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர். சிறந்த நூலுக்கான பரிசும் பெற்ருள்ளார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் பேராய்வுத் திட்டம் (2007-2010). செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறுந்திட்ட ஆய்வு (2012) செய்துள்ளார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் தகைசால் பேராசிரியர் (Emeritus fellow ship, 2014-2016) சிறப்பையும் பெற்று ஆய்வு செய்துள்ளார்.
Be the first to rate this book.