தினத்தந்தி ஞாயிறு மலரில் எது நிஜம்? என்ற தலைப்பில் வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த இந்தத் தொடர், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம் என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித ஆய்வுக்கூடங்களோ நவீன கருவிகளோ இல்லாத நிலையில் பழங்கால இந்தியர்கள் வானவியல், கணிதம், மருத்துவம், கடல் கடந்த வாணிபம் போன்ற பல துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை ஆற்றி இருக்கிறார்கள். இவை நமக்கு மலைப்பைத் தருவதோடு ஆச்சரியத்தையையும் அளிக்கிறது. இன்றைய கணிதத்துக்கு ஆதாரமான பூஜ்யத்தைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தது; அணுவைப் பிளக்க முடியும் என்று அறிந்து கூறியது; நானோ மீட்டர் என்ற அளவை விட மிகச் சிறிய அளவை முறைகளைப் பயன்படுத்தியது போன்ற எண்ணற்ற செய்திகள் நம் விழிகளை விரியச் செய்கின்றன. இதில் எது நிஜம்? அல்லது அவை கற்பனை கலந்த கட்டுக்கதைகளா? அவை நிஜம் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்ற வினாக்கள் பல அரங்குகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கான விடையைத் தேடும் வகையில் பல அற்புதமான தகவல்களை அறிஞர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் துணை கொண்டு அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார், ஆசிரியர் அமுதன்.
Be the first to rate this book.