பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம் என்ற இந்த நூலில் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகளிலிருந்து எடுக்கப்பட்ட 1127 குறியீடுகள் உள்ளன. ஒரு சொல்லுக்குப் பல்வேறு குறியீடுகள் இருப்பதையும் இந்த நூல் சுட்டுகிறது. ஒவ்வொரு குறியீட்டுக்கும் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆய்வுரையும் மூன்று மொழிகளில் தரப்பட்டுள்ளது. இந்நூலில் அளவைக் குறியிடுகள், அளவை அல்லாத குறியீடுகள், அளவை வாய்ப்பாடுகள், கூட்டெழுத்து வடிவங்கள், நிலஅளவை வாய்ப்பாட்டுக் குறியீடுகள் ஆகியன உள்ளன. தமிழ்மொழியில் குறியீடுகள் பற்றி தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணத்தில் காண முடியும். வேறு சில நூல்களும் உள்ளன. சா. கணேசன் போன்ற சிலரின் கட்டுரைகளும் காணப்படுகின்றன. ஆனால், குறியீடுகளைப் பற்றிய விரிவான தொகுப்புக் களஞ்சியம் என்பது இந்த நூலின் சிறப்பு. நூலாசிரியரின் கடின உழைப்பு இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.
Be the first to rate this book.