பழமொழிகள் நெடுவாழ்க்கை வாழ்ந்த குமுகாயப் பேரறிவின் தொகுப்புத் தொடர்கள். சுருங்கச் சொல்வதும் சுருக்கென மனத்தில் தைக்குமாறு விளங்க வைத்தலும் அவற்றின் சிறப்பு. பழமொழித்தொடர்களால் வாழ்க்கையைக் கற்பித்தவர்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் இயன்ற இடங்களிலெல்லாம் இடையறாது அத்தொடர்களை எடுத்தாண்டனர். இந்நூலில் பழமொழிகள் சிலவற்றின் பெரும்பொருளை தமக்குரிய மொழியில் விரித்துரைக்கிறார் ஆசிரியர். தமிழ் மரபு வளத்தின் அடர்த்தியையும் பசுமையையும் தெளிவாக விளக்குகிறார்.
Be the first to rate this book.