முப்பதுகளில் தமிழ் சினிமா பேச ஆரம்பித்தபோது, உண்மையில் பாடல்களின் தொகுப்பாகத்தான் இருந்தது. 1932 தொடங்கி 1936 வரையிலான 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பாட்டுப் புத்தகங்களை ஐந்து பெரும்தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார் திரைப்பட ஆய்வாளர் பொன்.செல்லமுத்து. ராயல் சைஸில், ஏறக்குறைய 1,600 பக்கங்களில் அன்றைய பாட்டுப் புத்தகங்களை ஒரிஜினல் வடிவத்திலேயே படிக்கும் அனுபவம். பாடல்களுக்கான ராக, தாளக் குறிப்புகளுடன் படத்தின் கதைச் சுருக்கமும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒவ்வொரு திரைப்படத்தைக் குறித்தும் கூடுதல் தகவல்களோடு அரிதான புகைப்படங்களையும் சேர்த்து, இந்தப் புத்தகங்களை ஆவணக் களஞ்சியமாக அளித்திருக்கிறார் பொன்.செல்லமுத்து.
Be the first to rate this book.