மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாகவும், புறத்தோற்றத்தை எப்போதும் அழகு மிளிர வைத்துக்கொள்ளவும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளைத் தருகிறார் ராஜம் முரளி.
''மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம், அவற்றின் மகத்துவம் புரியாமலேயே! அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம்!'' என்கிறார் ராஜம் முரளி. தன் குடும்பத்தின் மூத்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக்கொண்ட கைப்பக்குவங்கள் ஏராளம்.
Be the first to rate this book.