தினத்தந்தியில் "மாணவர் ஸ்பெஷல்" பகுதியில் நெல்லை கவிநேசன்,"பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி?" என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் இடம் பெற்ற "பிறரோடு இணைந்து பழகுவது எப்படி?", "மன அழுத்தத்தை மாற்றுவது எப்படி?", "முரண்பாடுகளைக் கையாளுவது எப்படி?" ஆகிய பகுதிகளை இணைத்து "பழகிப்பார்ப்போம் வாருங்கள்" என்றதலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
மனச் சோர்வுகளை நீக்கி, முரண்பாடுகளைக் களைந்து, குழுவோடு இணைந்து வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் உள்ளடக்கி, பல சான்றுகளையும், உண்மை நிகழ்வுகளையும் தாங்கி இந்த நூல் அமைந்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி புரியும் மாணவர்களுக்கும், இளம் பட்டதாரிகளுக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் விளங்கும்.
Be the first to rate this book.