குழந்தைகள் அவர்களுடைய களங்கமில்லாத கண்கள் வழியே இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகமும் மனிதர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான அத்தாட்சியாக அனாமிகாவின் கதைகள் அமைந்திருக்கின்றன. இன்று தமிழில் புதிதாக எழுதவரும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அனாமிகா தான் கண்ட உலகத்தை கதைகளாக மாற்றியிருக்கிறார். நான்கு வரிகளில் இருந்து ஐம்பது வரிகள் வரையே இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் வெளிப்படும் உணர்வுகள் ஆழமான வை. இந்த கதைகளை பெரியவர்களும் வாசிக்கும் போது குழந்தையின் கண்களில் தாங்கள் எப்படி தெரிகிறோம் என்பதையும் கண்டு உணர முடியும். வாருங்கள்! அனாமிகா வின் உலகத்திற்குள் பயணம் செல்லலாம்.
Be the first to rate this book.