'பயணம் இளமையில் கல்வியின் ஒரு பகுதி முதுமையில் அனுபவத்தின் ஒரு பகுதி' என்றார் ஒரு அறிஞர். 1958-59ல் நான் ஜோலார் பேட்டை மாவட்டக்கழக உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள், சற்றும் எதிர்பாராத விதமாக 'உலகம் சுற்றும் தமிழன்' மறைந்த ஏ.கே. செட்டியார் அவர்கள் வருகை தந்தார். உலகம் சுற்றினேன், இலங்கை , நேபாளம், கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை , சுற்றுலா தலங்கள் என பலவற்றைக் குறித்து எழுதியுள்ளார். அவரின் நூல்கள் என்னுள் இத்தகைய நூல்களைப் படிக்க வேண்டும், பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. மேலும் இது போன்ற நூல்களை, கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
Be the first to rate this book.