ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். தொழில்முறைப் பயணமாக இந்தியா'முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 'இணைந்துகொண்டவர். அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும்முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறவர். வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும் தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.
Be the first to rate this book.