வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவதைப் போலவே பயணத்திற்கான ஒழுங்கையும், வழிகாட்டுதல் களையும் வகுத்துத் தந்துள்ளது இஸ்லாம்.
இஸ்லாம் வழங்கியுள்ள கோட்பாடுகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளும் பொழுது பயணம் இனிதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பயணம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன? உல்லாசப் பயணம் விரயமாகுமா? பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை? பயணத்தின்போது வழிபாடுகளில் தரப்படும் சலுகைகள் என்னென்ன? என பல கேள்விகளை எழுப்பி அத்தனைக்கும் தனக்கே உரிய பாணியில் விடை களையும் கோர்வை செய்திருக்கிறார் பன்நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள்.
பெண்களின் பயணம் குறித்து இஸ்லாத்தின் அறிவுரைகளை பதிவு செய்திருப்பது இந்நூலின் முத்தாய்ப்பான அம்சமாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.