புராணக் கதைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி பல நாடகங்களை குணசேகரமவர்கள் படைத்துள்ளார். பெண்சார்ந்த சிந்தனையுடன் அடக்கப்பட்டோரின் ஆவேசக்குரலாக இந்நாடகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. சமகாலத்தின் நிலைமைகளை வழிவழியாக வந்த மரபுகளின் தொடர்ச்சியாக இனங்கண்டு குறிப்பாக இந்துதத்துவ மேலாண்மை மீது கேள்வி எழுப்பும் ஒரு போக்கை இவரது நாடகங்களில் காணமுடிகின்றது. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு நாடகம் தொழில்முறையான பெண் நடிகைகள் மீது காணப்படும் பாலியல் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. இந்நாடகம் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
Be the first to rate this book.