தம்பி தங்கமணி தன் கால்சட்டை நாள்களின் உழைப்பு அனுபவங்களாலும் ஊறிவரும் தத்துவார்த்தப் பிழையற்ற... கவித்துவக் குறையற்ற வலிகள் சுமந்த வரலாற்றுக் கவிதைகளை படைத்திருக்கிறார்.
“அதிகப்படியான அறிமுகம் அவர்களுக்கு அவசியமில்லை. உழைப்பு என்ற ஒரு சொல்போதும்”
“எளிய மக்களின் வாழ்க்கை எவ்வளவு வலிகளால் நிரம்பியிருக்கிறதோ அதே அளவிற்கு நிறைவான மகிழ்ச்சியையும் கொண்டிருக்கிறது.”
“காலம் காலமாய் இவர்களின் உழைப்பைச் சுரண்டிதான் வரலாறு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்கான இடம்தான் குறைவாகவே இருக்கிறது.”
தம்பி தங்கமணி! வரலாற்றுப் பக்கங்களில்
உன் கவித்துவ வெப்பக் கொதிநிலை...
பல பொய்ப் பக்கங்களை எரித்துச் சாம்பல் செய்யும் வஞ்சிக்கப்பட்ட உழைப்பின் வலிமையைப் பெரிது செய்யும் பணியில் உன் கவிதை ஆளுமையும்
தன் உயரிய கடமையைச் செய்யும்.
- கவிஞர் அறிவுமதி
Be the first to rate this book.