காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும் சைவத்திரு முறைகள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாமவர் பதினாறாம் நூற்றாண்டினர். இவர் செய்த 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூல் தனியாக வெளிவந்துள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறும், நூல்களின் சிறப்பு அம்சங்களும் இந்நூலில் விவரமாய் எழுதப்பட்டுள்ளன.
Be the first to rate this book.