செவ்வண்ண துண்டுப் பிரசுரத்தோடு அலையும் மனங்களுக்குள்ளும், அறிவை உரசிப் பார்த்துக்கொண்டேயிருக்கும் ஜீவராசிகளுக்குள்ளும் கனிந்து பெருகும் அன்பின் ஈரம் கசியும், எளிய மொழியிலான கதைகள் இவை. தேவதைகளெனவும் பேய்களெனவும் மட்டுமே பெரும்பாலும் கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள் அற்புத மானுடர்களாக அபூர்வமாய் மிளிர்கிறார்கள்.
உள்ளீடாய் இழையோடும் துயரத்திற்கு இணையாக பகடி போர்த்திய இக்கதைகளுக்குள், அரசியல், கலை - இவற்றில் எதன் கையைப் பற்றிக்கொண்டு செல்வதென்கிற குழப்பமின்றி, இரண்டின் கரங்களையும் நாம் பிடித்துக்கொள்கிறோம். இறுதியில் அவையிரண்டும் விடாது நம்மையும் பற்றிக்கொள்கின்றன.
Be the first to rate this book.