நரிகள் மனிதர்களோடு சமமாகத் திரியும் காலம் ஒன்று வந்தது. நரியைத் தனக்கு இணையாக அல்லது தனக்கு ஒரு படி கீழாக எண்ணத் தொடங்கினான். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விதைத்த விதை முளைவிடத் தொடங்கியது. ஒரு பெருவெள்ளத்தில் கோவிலும் சிலையும் அடித்துச் செல்லப்பட்டன. இரத்தக் கறைகள் மறைந்தன. குளத்தில் மீன்களுக்கு கால்கள் முளைத்து, கரையேறி நடைப்பயிற்சிக்காக சாலைக்கு வந்தன. சாலையின் வலது பக்கத்தில் இருந்த சுவரில் கஞ்சா புகைத்தபடி ஓர் ஓவியன் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
- நூலிலிருந்து…
Be the first to rate this book.