காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம்,வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒரு தனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையைக் கொண்டவை. 'பத்துமலை பந்தம்' என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.
நவபாஷாண முருகன் சிலை மற்றும் அதைச் சுற்றி நடக்கும் அதிசயச் சம்பவங்கள் என இந்த நாவல், தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்குப் பாய்ந்து செல்லும் விமானத்தைப் போலப் பறந்து செல்கிறது. சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம்.
சுவாரசியமான ஓர் ஆச்சரிய, ஆன்மிகப் பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.